search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோத தகராறு"

    போடி அருகே முன்விரோத தகராறில் தந்தை, மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    போடி அருகே சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது40). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது குமார்பொம்மு (39) என்ற வாலிபர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கணேசன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அவ்வழியே சென்ற கணேசனை, குமார்பொம்மு வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் உடலை கீறினார்.

    இதனை தடுக்க வந்த கணேசனின் தந்தை மல்லையனும் தாக்கப்பட்டார். 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் பொம்முவை கைது செய்தனர்.

    செய்யாறு அருகே முன்விரோத தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்யாறு:

    செய்யாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30).வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்நிலையில் ஆறுமுகம் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றார்.அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த குமார் ஆறுமுகத்திடம் வீண் தகராறு செய்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த குமார் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை குத்தினார். இதனை கண்ட ஆறுமுகத்தின் சகோதரர்கள் நேதாஜி மற்றும் ரஜினிகாந்த் தட்டி கேட்டனர். அவர்களையும் குமார் பீர்பாட்டிலால் குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த 3 பேரும் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் இன்று முன்விரோத தகராறில் வெள்ளி பட்டறை தொழிலாளியை வெட்டி சாய்த்த மனைவியின் கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் குகை, பாபுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 38). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், தனது உறவினரான சேலம் பட்டைக்கோவில், குமரன் தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் சாந்தாராமனிடம் (30) இருந்து ரூ. 40 ஆயிரம் கடனாக கந்து வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    சாந்தாராமன் குகை லைன்ரோடு கறிக்கடை வீதியில் உள்ள ஒரு கறிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த கறிக்கடை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ளது.

    வழக்கம்போல் இவரும், கோபிநாத்தும் கறிக்கடை வீதி அருகே உள்ள அம்பலவானர் தெருவில் இருக்கும் ஒரு டீக் கடையில் டீ குடிப்பது பழக்கம். அப்போது வட்டி பணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாந்தாராமுக்கும், கோபிநாத்தின் மனைவி கமலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    கோபிநாத்தை தீர்த்துக்கட்ட சாந்தாராமன் முடிவு செய்தார். அதன்படி இன்று காலை அவர் கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு வழக்கமாக சந்திக்கும் டீக்கடை முன்பு காத்திருந்தார்.

    அப்போது அவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தான் அம்பலவானர் தெருவில் உள்ள டீக்கடையில் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கோபிநாத்திடம் கூறினார்.

    இதையடுத்து கோபிநாத் அந்த டீக்கடைக்கு சென்றார். அங்கிருந்து சாந்தாராமன் தான் கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடு என்று கேட்டார்.

    அதற்கு கோபிநாத் தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறவே, டீக்கடை பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் இருந்து வெட்டுவதற்கு கத்தியை எடுத்தார்.

    இதை பார்த்ததும் கோபிநாத் அங்கிருந்து ஓடினார். ஆனால் சாந்தா ராமன் அவரை விடாமல் விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டினார். முதலில் முகத்தில் ஓங்கி வெட்டினார்.

    முகத்தில் இருந்து மளமளவென ரத்தம் வழிந்த நிலையில் கோபிநாத் வலியால் அலறினார். பின்னர் காது, முகம், வாய், கை உள்ளிட்ட இடங்களில் ஓங்கி வெட்டினார். மேலும் சாந்தா ராமன் ஆத்திரம் அடங்காமல் கோபிநாத்தின் இடது கையை வெட்டினார். இதில் கோபிநாத்தின் இடது கை தொங்கியது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கொலை வெறி தாக்குதல் நடத்திய கறிக்கடை தொழிலாளி சாந்தாராமன் கத்தியுடன் நேராக சென்று செவ்வாய்ப் பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கமலாவுடனான கள்ளத் தொடர்பு தகராறு காரணமாக ஏற்கனவே கோபிநாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாந்தாராமை ஆள் வைத்து தாக்கியதும், இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தற்போது கோபிநாத்தை, அவர் வெட்டி சாய்த்ததும் தெரிய வந்தது.

    கமலாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி மஞ்சு பாஷினி (18), தர்ஷினி(14), என்ற 2 மகள்கள் உள்ள நிலையில் கோபிநாத் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும் உள்ளார்.

    கமலாவுடன் போலீசார் விசாரித்த போது, பிறந்த குழந்தைகளை கழுவும் வேலைக்கு சென்று வந்த எனக்கு எனது மாமா மகனான சாந்தாராமுடன் முன்பு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அழைத்து செல்வார் என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மீன்சுருட்டி, 

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது மகன் தினேஷ்குமாருடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். 

    அப்போது அதே தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஜவகர்(24) முன்விரோதம் காரணமாக தவசாமியையும், தினேஷ்குமாரையும் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் பெணணை குத்திக்கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி வெற்றிச்செல்வி (வயது 46).

    இவருக்கும், தவசீலனின் தம்பி சதாசிவத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வெற்றிச் செல்வி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதாசிவம், வெற்றிச்செல்வியை ஆபாசமாக திட்டினார்.

    சதாசிவத்திடம் ஏன் என்னை திட்டுகிறீர்கள்? என்று வெற்றி செல்வி கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிச்செல்வியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வெற்றி செல்வி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சதாசிவம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் வெற்றி செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெற்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் வெற்றிச்செல்வியின் மகன் கிருபாநிதி புகார் செய்தார். அதன் பேரில் சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடிக்க காட்டு மன்னார்கோவில் இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சதா சிவத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருச்சியில் முன்விரோத தகராறில் வாலிபரை கடத்த முயன்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் காட்டுமன்னார் கோவில் ஈச்சமண்டியை சேர்ந்த பூமிநாதன். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் சக்திவேல் தனது நண்பர்களுடன் கேரளாவிற்கு வேலைக்கு செல்ல திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பூமிநாதன் மற்றும் அவரது கட்டிட மேஸ்திரி புதுக்கோட்டை மணி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சக்திவேலை தாக்கி அவரை ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர். உடனே அவர் சத்தம் போட்டார். இதனால் பயந்து போன 4 பேரும் தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து சக்திவேல் பொன்மலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர். பூமி நாதன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.       
    ஆத்தூரில் முன்விரோத தகராறில் வாலிபரின் காதை அறுத்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று  வயலில் வைத்து இவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.  

    இந்நிலையில் திருப்பதி அவரது தம்பி சக்திவேல் இருவரும் சேர்ந்து இளையராஜாவை தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த இளையராஜா விஷம் குடித்தார். 

    இந்நிலையில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பதி, சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.
    முன்விரோத தகராறில் முடிதிருத்தும் தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    திசையன்விளை:

    உவரி அருகே கூடு தாழையை சேர்ந்தவர் தர்மராஜ். மாற்றுத்திறனாளி. இவரது மகன் ஜெனால்டு (வயது 24). முடிதிருத்தும் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த லிகோரி. கூலி தொழிலாளி. இவரது மகன் ராணா சங்கா (21). இருவரது குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரது குடும்பத்திற்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த லிகோரி, அவரது மகன் ராணா சங்கா ஆகியோர் தர்மராஜ் ஊன்று கோலாக பயன்படுத்தும் கம்பை பிடுங்கி ஜெனால்டை சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த ஜெனால்டு  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். 

    இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லிகோரியை கைது செய்தனர். மேலும் அவரது மகன் ராணா சங்காவை போலீசார் தேடி வருகின்றனர். தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மயிலாடுதுறை அருகே முன்விரோத தகராறில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது35). பாட்டாளி மக்கள் கட்சியில் இவர் முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்தவர்.

    மணிகண்டன் நேற்று சீனிவாசபுரம் அருகே தேவசேனாநகரில் உள்ள அவரது வீட்டு மனையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது திடீரென தேவசேனாநகரில் சென்றபோது 3 பேர் கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மணிகண்டனை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டார். உடனே 3 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்கு பதிவு செய்து ஆலவெளி சேமங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (30), எலந்தங்குடியைச் சேர்ந்த பாரதிராஜா (37), சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள ஆரோக்கியநாத புரத்தைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கபிரியேல் என்பவருக்கும், மணிகண்டனுக்கு இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது தூண்டுதலின் பேரில் இந்த 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜெயராஜ், பாரதிராஜா, தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சாத்தான்குளத்தில் முன்விரோத தகராறில் அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதலில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்ததான்குளம் பண்டாரபுரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 69). அ.ம.மு.க. நிர்வாகியாக இருந்து வருகிறார். ராஜபாண்டிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான தங்கவேலு என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நிலத்தை அளப்பதற்காக ராஜபாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராமர் எப்படி நிலத்தை அளக்கலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராமர், ராஜபாண்டியை அடித்து உதைத்துள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குப்பதிவு செய்து கார்டிரைவர் ராமரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அருகே முன்விரோத தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பு ஜெபநானபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி செல்வி வயது(48). கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சாலமோன் மனைவி பியூலாவுக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை அந்த வழியாக புல் கட்டுடன் வந்த செல்வியிடம், இந்த பாதைவழியாக எப்படி வருவாய் என கேட்டு பியூலா அவதூறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பியூலா செல்வியை கையில் கடித்தும், கழுத்தை நெறித்தும், அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

    இதில் காயமடைந்த செல்வி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் செல்வி தன்னை தாக்கியதாக பியூலாவும் புகார் கொடுத்துள்ளார். இருதரப்பு புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×